Sufi Poetry

திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து 

தீன் கூறி நிற்பர் கோடி 

 

சிம்மாசனாதிபர்கள் நஜரேந்தியே வந்து

ஜெயஜெயா என்பர்கோடி 

 

ஹக்கனருள் பெற்ற பெரியோர்கள் ஒலிமார்கள் 

அணிஅணியாய் நிற்பர்கோடி

 

அஞ்ஞான வேரறுத்திட்ட மெய்ஞ்ஞானிகள்

அணைந்தருகில் நிற்பர்கோடி

 

மக்க நகராளும் முஹம்மதி ரசூல் தந்த

 மன்னரே என்பர்கோடி

 

வசனித்து நிற்கவே கொலுவீற்றிருக்கும் மும்

 மகிமை சொல வாயுமுண்டோ

 

தக்கப்பெரியோ னருள் தங்கியே நிற்கின்ற

 தவராஜ செம்மேருவே

 

தயவுவைத் தெனையாளும் சற்குணங்குடி கொண்ட ஷாகுல் ஹமீத் அரசரே!

 

    – குணங்குடி மஸ்தான் சாஹிபு ஒலியுல்லா.

 

ஷாகுல் ஹமீத் காதிர் ஒலியுல்லாஹ் ​​
குணங்குடி மஸ்தான் சாஹிபு ஒலியுல்லா