அல்ஃபாத்திஹா – தோற்றுவாய்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
எல்லாப் புகழும் ஒருவனுக்கு
ஏகனாம் அல்லாஹ் இறைவனுக்கு
பல்லாயிரமாம் உலகங்கள்
படைத்தளித்தவன் காக்கின்றான்
எல்லையில்லா அருளாளன்
இரக்கம் நிறைந்த பரிவாளன்
தொல்லை உலக நாள் முடிவில்
தூய நீதி சபைக்கரசன்
அல்லாஹ்! உன்னை தொழுகின்றோம்
அழைத்து உதவி வேண்டுகிறோம்
நல்லார் அவர்கள் உனதன்பால்
நல்வழி பெற்றோர் நேர்வழியில்
செல்ல அருள்புரி உன் கோபம்
தேடிக் கொண்டோர் பிறழ் தெறியோர்
பொல்லா மாந்தர் அவர் வழியில்
போகாதெம்மை காத்தருளாய்! ஆமின்
சூரத்துல் ஃபாத்திஹா
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
அர்ரஹ்மானிர் ரஹீம்.
மாலி(க்)கி யவ்மித்தீன்.
இய்யா(க்)க நஅபுது வஇய்யா(க்)க நஸ்(த்)தயீன்.
இஹ்தினஸ் ஸிரா(த்)தல் முஸ்த(க்)கீம்.
ஸிரா(த்)தல்லதீன அன்அம்(த்)த அலைஹிம்
கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்.
பொருள்:
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
எல்லாப் புகழும் அகிலம் அனைத்தையும் படைத்து இரட்சிக்கும் இறைவனுக்கே!
அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்பாளன்.
தீர்ப்பு நாளின் அதிபதி. இறைவா!
உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.
உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
நீ எவர்களுக்கு பாக்கியம் புரிந்தாயோ அவர்களின் வழியில் எங்களை நடத்துவாயாக!
உன் கோபத்துக்கு ஆளானவர்களின் வழியுமல்ல;
நெறி கெட்டவர்களின் வழியுமல்ல.
Alhamdh Surah
In the name of Allah, Most Gracious, Most Merciful.
All praise is due to Allah, the Lord of the Worlds.
the Most Compassionate, the Most Merciful.
Master of the Day of Judgment.
You Alone we worship, and you Alone we ask for help.
Guide us to the straight path.
the path of those You have blessed; not of those who have incurred Your wrath, nor of those who have gone astray.
Bismillaahir Rahmaanir Raheem
- Alhamdu lillaahi Rabbil ‘aalameen
- Ar-Rahmaanir-Raheem
- Maaliki Yawmid-Deen
- Iyyaaka na’budu wa lyyaaka nasta’een
- Ihdinas-Siraatal-Mustaqeem
- Siraatal-lazeena an’amta ‘alaihim ghayril-maghdoobi ‘alaihim wa lad-daaalleen